Elavenil.com - இளவேனில்.காம் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை - கட்டுரை அனுப்புதல்
முகப்பு
ஆசிரியர் குழு
கட்டுரை அனுப்புதல்
பதிப்புரிமை பரிமாற்றம்
தொடர்புக்கு

உங்கள் கருத்துக்கள்

கட்டுரை அனுப்புதல்

ஆய்வு கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் எழுதி அனுப்ப, மின்னஞ்சல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: strjsanjigai2017@gmail.com.

ஆராய்ச்சி கட்டுரைகள் 6 - 10 பக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மறுபார்வை கட்டுரைகள் 15 பக்கங்களுள் வரையறுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆய்வு கட்டுரையிலும் குறைந்தபட்சம் ஐந்து சிறப்பு சொற்கள் கொண்ட 250 சொற்களின் மிகாத ஆய்வுச்சுருக்கம் இருக்க வேண்டும். ஒரு கட்டுரையின் வடிவம் பின்வருமாறு இருக்க வேண்டும்:

தலைப்பு (துல்லியமான மற்றும் அர்த்தம் கொண்ட), ஆய்வுச்சுருக்கம்(ஆய்வு முடிவுகள் சுருக்கமாக வேண்டும்), அறிமுகம் (ஆய்வை மையமாக கொண்டு நியாயப்படுத்த வேண்டும்), பரிசோதனை(கோட்பாடு, மாதிரி), முடிவுகள் மற்றும் விவாதங்கள், முடிவு மற்றும் பின்குறிப்புகள். ஆராய்ச்சி கட்டுரைகள் ஆசிரியர்களின் மூலப் படைப்பாக இருக்க வேண்டும் மற்றும் அது எந்த வடிவத்திலும் வேறு இடங்களில் வெளியிடப்பட கூடாது.

ஆய்வுப் பிரதியை சமர்ப்பிக்கும் போது, அவற்றின் இணைப்புகளாக, பெயர், பதவி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுடன் நான்கு திறனாய்வாளர்களைப் பரிந்துரைக்க வேண்டும். அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் முதலில் சஞ்சிகை ஆசிரியர்களில் ஒருவரால், சஞ்சிகைக்கான ஏற்புடைமை மதிப்பீடு செய்யப்படும். பின்னர் அக்கட்டுரைகளை பொதுவாக தொடர்புடைய ஆய்வில் நிபுணத்துவம் கொண்ட குறைந்தது இரண்டு மதிப்பீட்டாளர்களுக்கு விஞ்ஞான தரத்தை மதிப்பீடு செய்ய அனுப்பி வைக்கப்படும். கட்டுரைகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பான இறுதி முடிவிற்கு சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் பொறுப்பாளியாக இருக்கிறார். சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் முடிவே இறுதியாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இறுதி தொழில்நுட்ப செயலாக்கத்திற்குப் பிறகு வெளியிடப்படும்.

அனைத்து உரிமைகளும் "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகைக்கு" உரியதாக்கப்படும். இச்சஞ்சிகையில் வெளியிடப்பட்ட கட்டுரையின் எந்தவொரு பகுதியும், குறிப்பாக முடிவுகளின் பகுப்பாய்வை, தலைமை ஆசிரியரின் எழுத்துமூலமான அனுமதியின்றி வேறு சஞ்சிகைகளிலோ நூல்களிலோ வெளியிடக்கூடாது. ஆய்வு கட்டுரையினை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை வெளியீட்டுக்கு ஏற்றுக்கொண்ட பிறகு, அக்கட்டுரைக்கு பொறுப்பேற்கும் ஆசிரியர் கையொப்பமிடப்பட்ட பதிப்புரிமை பரிமாற்ற உடன்படிக்கையை, அனைத்து சக ஆசிரியர்களின் சார்பாக அனுப்ப வேண்டும்.

மீளாய்வு நடைமுறை:
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் நிலை மின்னஞ்சல் மூலம் தொடர்புடைய கட்டுரையின் பொறுப்பாசிரியருக்கு அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

கட்டுரை அனுப்புதல்:
கட்டுரை பிரதிகளை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: strjsanjigai2017@gmail.com.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, MS Word (பதிப்புகள் 1997 முதல் 2003 வரை) மென்பொருளில் மின்னணு வடிவத்தில், அறிவியல் பங்களிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ் மொழியில் கையெழுத்து லதா எழுத்துருவில் (LATHA Font) தட்டச்சு செய்ய வேண்டும்.

முழு கட்டுரை பிரதியானது ஒரே படிவமாக, ஆய்வு சுருக்கம், அறிமுகம், புள்ளிவிவரங்கள், உருவங்கள், அட்டவணைகள் மற்றும் அட்டவணை தலைப்புகள், முடிவுகள் மற்றும் விவாதங்கள், இறுதி முடிவு, பின்குறிப்புகள், ஒப்புதல்கள், முதலியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

கட்டுரை தரமான மொழியில் தயாரிக்கப்பட வேண்டும். (தாளின் அளவு, எழுத்துருவின் அளவு குறிப்பிட வேண்டும்)

Reference formatting
Text: Indicate references by number(s) in square brackets in line with the text. The actual authors can be referred to, but the reference number(s) must always be given.

Example: '..... as demonstrated [3,6]. Barnaby and Jones [8] obtained a different result ....'

The reference style is strictly used to the following examples:

Reference to a journal publication:
[1] D. Subhas Bose, L. Fatima, H .B. Mereyala, J. Org. Chem, 68(2003), 587-590.

[2] J. van der Geer, J.A.J. Hanraads, R.A. Lupton, The art of writing a scientific article, J. Sci. Commun. 163 (2010), 51-59.

Reference to a book:
[2] W. Strunk Jr., E.B. White, The Elements of Style, fourth ed., Longman, New York, 2000.

Reference to a chapter in an edited book:
[3] G.R. Mettam, L.B. Adams, How to prepare an electronic version of your article, in: B.S. Jones, R.Z. Smith (Eds.), Introduction to the Electronic Age, E-Publishing Inc., New York, 2009, pp. 281-304.

Reference to a website:
[4] Cancer Research UK, Cancer statistics reports for the UK. http://www.cancerresearchuk.org/aboutcancer/statistics/cancerstatsreport/, 2003 (accessed 13.03.03).